நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கு சிறப்பு கட்டணக் குறைப்பு!
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' கப்பல் சேவைக்கு நவம்பர் மாதத்திற்கென சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறையில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் நேற்று (04.11.2026) நடந்த ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கட்டணக் குறைப்பு:
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை, காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் ₹5,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பயணப் பொதி சலுகை:
பயணிகள் 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் மற்றும் 7 கிலோ வரை கைப்பைகளை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
கூடுதல் லக்கேஜ் கட்டணம்:
- 5 கிலோ: ₹1,500 (LKR 5,250 / USD 16)
- 10 கிலோ: ₹2,500 (LKR 8,750 / USD 26)
- 30 கிலோ: ₹6,000 (LKR 21,000 / USD 63)
பயணிகள் கொள்ளளவு:
- நாகப்பட்டினம் - காங்கேசன்துறை: அதிகபட்சம் 110 பயணிகள்
- காங்கேசன்துறை - நாகப்பட்டினம் அதிகபட்சம் 150 பயணிகள்
திருத்தப்பட்ட கட்டண விபரம்:
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை (Economy)
- பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58
- குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் (Economy & Pre Eco)
- Economy - பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58
- Economy - குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53
- Pre Eco - பெரியவர்கள்: ₹6,000 | LKR 21,000 | USD 64
- Pre Eco - குழந்தைகள்: ₹5,500 | LKR 17,250 | USD 58
கடந்த வருடம் போல் இம்முறை மழைக்காலத்தில் சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் இந்த சலுகையை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
