கேது கடக ராசிக்கு பெயர்ச்சி: யாருக்கெல்லாம் ராஜயோகம்?
ஜோதிட சாஸ்திரத்தின்படி கேது நவகிரகங்களில் 'நிழல் கிரகம்' என அழைக்கப்படுகிறது. பொதுவாக எதிர்மறை பலன்களை தரும் கிரகமாக கருதப்படும் கேதுவின் பெயர்ச்சி, முக்கியமான கர்ம மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கேதுவுக்கு உருவம் இல்லை என்றாலும் அதன் தாக்கம் வலிமையானது. ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.
நவம்பர் 25-ம் தேதி கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்கிறது. இதனால் உணர்வுகள் மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்கள் முக்கியத்துவம் பெறும்.
பெரும்பாலான ராசிக்காரர்கள் சில சவால்களை சந்தித்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கப்போகின்றன. அவை எவை என்று பார்க்கலாம்.
ரிஷபம்
கேதுவின் இந்த மாற்றம் ரிஷப ராசிக்காரர்களின் பேச்சு மற்றும் பழகும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கும். முதலீடுகளில் லாபம், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல், மன வலிமை அதிகரிக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் விரைவான லாபத்தை விட நீண்டகால நிதி பாதுகாப்பு, முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். சரியான நிதி மேலாண்மை பொருளாதார நிலைத்தன்மைக்கு உதவும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமணமாகாதவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். புதிய சொத்து வாங்க ஏற்ற காலம். பெரிய உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
விருச்சிகம்
கேதுவின் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும். வேலை, வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கலாம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு தொழிலில் புதிய உயரங்களை அடைய உதவும். துணையின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, புதிய திட்டங்களில் ஈடுபட வாய்ப்புகள் அமையும்.
மகரம்
கேதுவின் இந்த பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும். அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உருவாகும். மனநலம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் அமையும்.
