வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு! மீனவர்களே அவதானம்!
மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை ஏற்படக்கூடும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (18) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (19) பிற்பகல் 3.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:
இலங்கை
