வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பு!
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று (நவம்பர் 01) ரூ.11 உயர்ந்து ரூ.3,016.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதி விலையை நிர்ணயம் செய்கின்றன.
இன்றைய விலை நிலவரம்:
- வர்த்தக சிலிண்டர் (19 கிலோ): ரூ.11 உயர்ந்து ரூ.3,016.50
- வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ): மாற்றமின்றி ரூ.957.50
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வர்த்தக சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், அக்டோபரில் ரூ.66.50 உயர்த்தப்பட்டது. தற்போது நவம்பரிலும் ரூ.11 உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் கடந்த மே மாதத்திற்கு பிறகு மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
இந்திய செய்தி
