சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பை தொடர்ந்து லிட்ரோ நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்
நவம்பர் மாதத்திற்கான எரிவாயு விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் அந்நிய செலாவணி விகித சவால்கள் இருந்தபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விலையை உயர்த்தாமல் இருக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நவம்பர் மாதத்திலும் ஏற்கனவே உள்ள விலையிலேயே லிட்ரோ எரிவாயு விற்பனை செய்யப்படும்.
Tags:
இலங்கை
