இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு; TIN இல்லாமல் Revenue Licence இல்லை
இலங்கை முழுவதும் வாகன வருமான வரி உரிமம் (Revenue Licence) புதிதாக பெறவும், புதுப்பிக்கவும் TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை 2026 ஜனவரி 11 முதல் அமலுக்கு வந்துள்ளதாக மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்:
-வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழ் (CR) உடன் TIN சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- உரிமை மாற்றத்தின் போது MTA 11 மற்றும் CMT 52 படிவங்களுடன், CMT 52 படிவத்தில் பெயர் உள்ள நபரின் TIN சான்றிதழ் அவசியம்.
- TIN சான்றிதழின் அச்சு மற்றும் மின்னணு பிரதிகள் இரண்டும் ஏற்கப்படும்.
விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
1. 18 வயதுக்கு குறைந்தவர்கள்
2. 183 நாட்களுக்கு குறைவாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்
3. TIN விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள்
4. இராஜதந்திர சலுகை பெற்றவர்கள்
5. தனிநபர் அல்லாத நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்
