தங்கம் வாங்க உள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி - அதிரடியாக குறைந்த தங்கம், வெளியான முக்கிய தகவல்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை, இன்று (அக்டோபர் 31) ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்துள்ளது.
இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் தங்கம் ரூ.13,000-க்கு கீழ் சரிந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 31):
- 22 கேரட் (1 கிராம்): ரூ.310 குறைந்து ரூ.12,730
- 22 கேரட் (1 சவரன்): ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840
- 24 கேரட் (1 கிராம்): ரூ.13,887
- 24 கேரட் (1 சவரன்): ரூ.1,11,096
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
இந்திய செய்தி
