தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!


தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை (Fuel Quota) வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் வருகை தொடர்பான விரிவான அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அத்துடன், தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் ஏனைய சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் குறிப்பிட்டளவு மேலதிக எரிபொருளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.