Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்!
நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நிகழ்வு இடம்பெறும்.
திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் மனித உயிர்கள் உட்பட பாரிய சொத்து இழப்பு ஏற்ப்பட்டது.
உயர்மட்டத்திலான சிறந்த ஒருங்கிணைப்புகளுடன் கூடிய தேசிய மீள் புனரமைப்பு பொறிமுறையொன்றை அவசர தேவைகளுக்கமைய உருவாக்கும் நோக்கில் Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டை மீள கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் 3 கட்டங்களின் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
