சிறுவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனையால் 'விட்டமின் D' குறையும் அபாயம்!


சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

வீட்டுக்குள்ளேயே இருந்து வெறும் டிஜிட்டல் சாதனங்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் வெளியில் சென்று விளையாடி சூரிய ஒளியில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. 

குறிப்பாக, அதிகாலை நேர சூரிய ஒளியை தற்கால சிறுவர்கள் அனுபவிப்பதேயில்லை. 

எனவே விட்டமின் டி சத்து குறையும்போது சிறுவர்கள் இயற்கையாகவே நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதை தவிர்த்து வெளிப்புற விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடும்போது அவர்களது மன வளர்ச்சியும் நன்றாக இருக்கும். 

எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் ஸ்க்ரீன் டைமை வரையறைக்க வேண்டும். 

முடியுமானவரை வெளிப்புற விளையாட்டுக்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.