போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 12 வகையான போதைப்பொருட்களைக் கண்டறிய முடியும் என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பீ.ஜே. சேனாதீர தெரிவித்தார்.