மீண்டும் 4 இலட்சத்தை எட்டிய தங்கம்!


நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலை நான்கு இலட்சத்தை எட்டியுள்ளது. 

கடந்த 02 ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாகக் காணப்பட்டது. 

இந்த நிலையில்  இன்று (05) 3,000 ரூபாவால்  அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்று 359,000 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 332,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.