2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்!
இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, 11.484 மில்லியன் மீற்றர் துணி நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவை அனைத்தும் சீன மக்கள் குடியரசின் முழுமையான நன்கொடையாக துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன.
இந்த சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெறும்.
சுமார் 4,418,404 மாணவர்கள் பாடசாலை சீருடைகளைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், ஜனவரி 19 ஆம் திகதி முதல் அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Tags:
இலங்கை செய்தி
