பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்!


திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் ஊடாக இதற்கென மாற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் குறுகிய காலத்திற்குள் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனர்த்தங்களால் முழுமையாக 6000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதியளவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகளுக்கு சேதம் ஏற்படாத போதிலும் தொடர்ந்தும் வாழ்வதற்கான சூழல் இல்லாத பகுதிகளும் உள்ளதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.