பொலிசாருக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் விளக்கமறியலில்..!


கடந்த 24ஆம் திகதி, சாமிமலை – கவரவளை பகுதியில் வசித்து வந்த சந்தேக நபர் ஒருவர், மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிக்கு 710 மில்லிகிராம் கஞ்சாவை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் கௌரவ பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,

  • கவரவளை 200 பிரிவைச் சேர்ந்த ஒருவர்,
  • மஸ்கெலியா – சாமிமலை வீதியைச் சேர்ந்த இருவர்
    உள்ளடங்கலாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், மூவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில், தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், கடந்த 24ஆம் திகதி,

  • மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி புலத்சிங்கள,
  • சார்ஜன்ட் ருக்மன்,
  • கான்ஸ்டபிள் நவ்சாத்
    ஆகியோர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று (25ஆம் திகதி) ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.