தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தை தாய்ப்பால் அருந்திய பின்னர் விக்கல் எடுத்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து தாய் தாலாட்டியதை அடுத்து குழந்தை தூங்கியுள்ளது.
நீண்ட நேரமாகியும் குழந்தை தூக்கத்தால் எழும்பாததால், தாயார் குழந்தையை எழுப்ப முற்பட்ட வேளை குழந்தை அசைவின்றி காணப்பட்டமையால்,
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
Tags:
இலங்கை செய்தி
