பெண்கள் தங்கும் விடுதியில் கழிவு குழாய் அடைப்பு ; குவியல் குவியலாக வெளிவந்த ஆணுறைகளால் அதிர்ச்சி!
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் கழிவு குழாய் அடைபை சீர் செய்தபோது அங்கு குவியல் குவியலாக வெளிவந்த ஆணுறைகள் வெளிவந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை (28) உறைவிடத்தின் முழு கழிவு குழாய் அமைப்பு அடைந்ததாகத் தெரிந்தபோது, சுத்திகரிப்பு பணியாளர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குழாய் அடைப்பில், ஆயிரக்கணக்கான ஆணுறைகள் (condoms) இருந்தன. இந்த சம்பவம் கண்டறியப்பட்டவுடன், உறைவிட உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.
இதனால், உள்ளூர் மக்கள், பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டது. உறைவிடத்தின் முழு கழிவு அமைப்பும், சுற்றியுள்ள பகுதிகளின் கழிவு குழாயும் அடைந்ததால், சுத்திகரிப்பு பணிகள் தொடங்கின.
அப்போது, குழாயிலிருந்து ஆயிரக்கணக்கான ஆணுறைகள் மற்றும் பிற கழிவுகள் வெளியெடுக்கப்பட்டன. அந்த விடுதியில் சுமார் 60 பெண்கள் தங்கியிருந்தனர்.
கடந்த சில நாட்களாகவே உறைவிடத்தின் கழிவு குழாய் அடைந்து கொண்டிருந்ததாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்ததாகவும் உறைவிட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த குற்றவியல் அல்லது அநாகரிக நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், , "கடந்த மூன்று மாதங்களில் CCTV கெமரா காட்சிகளை கைப்பற்றியுள்ளோம். அதனை ஆய்வு செய்து உண்மையைத் தெரிந்துகொள்வோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் குறித்த புகைப்படங்கள் போலியானவை எனவும் உண்மைக்கு புறம்பான தகவல் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
