பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றவர் கிணற்றில் விழுந்து பலி!
கொச்சிக்கடை, எத்கால தேக்கவத்த பகுதியில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கந்தானை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றை கொச்சிக்கடை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்த நபரொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பின் போது சூதாட்ட விடுதியில் 29 பேர் இருந்துள்ள நிலையில் அவர்களில் 9 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
