இலங்கையில் வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் ; உடலில் மிளகாய்ப் பொடி தடவப்பட்ட நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
மினுவாங்கொடை - யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மினுவாங்கொட, யட்டியன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வயோதிபப் பெண்ணின் உடலில் மிளகாய்ப் பொடி தடவப்பட்டிருந்ததாகவும், இந்த சம்பவம் நிகழ்ந்த விதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
