சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று வீசக்கூடும்!
சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு, இடி மின்னல், வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய,தெற்கு, வடக்கு,வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசுக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மணிக்கு சுமார் 50-60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக இந்த பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
