3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து; யாழில் ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி



