K விசா எனும் புதிய விசாவை அறிமுகம் செய்யும் சீனா!


அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற 1 மில்லியன் டொலர்  கட்டணம் செலுத்த வேண்டும் என்று ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது.

அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு அமுலில்  இருக்கும் என்றும் உத்தரவை நீடிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K-விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசா அறிமுகம் ஆகியுள்ளது.

இதேவேளை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் K-விசா நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.