உணவகமொன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞன் பலி!
கட்டான, கண்டவல பகுதியிலுள்ள ஒரு உணவகத்தின் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா, மௌஸ்ஸாகல பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்கள் சிலருடன் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கட்டான பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
