விஜய்யை கைது செய்ய வேண்டும் என வீதிகளில் சுவரொட்டி!


கரூரில் த.வெ.க கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததோடு பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் மற்றும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்தச் சுவரொட்டியில், ”தமிழக அரசே அப்பாவி உயிர்களை பலிவாங்கி தப்பியோடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய் - தமிழ்நாடு மாணவர் சங்கம்” என அச்சிடப்பட்டுள்ளது.