அரசாங்கத்தின் வருமானம் பாரிய அளவில் உயர்வு!
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3301.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் இது 2,565.9 பில்லியனாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த 8 மாதங்களில், மொத்த செலவுகள் மற்றும் நிகர கடன் 3,476.9 பில்லியனில் இருந்து 3,712.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி