பாடசாலை வேனுக்குள் மாணவிக்கு நடந்த கொடூரம்!


கொழும்பில் 4 ஆம் வகுப்பு மாணவியை துஷ்பிரயோகம் பாடசாலை வேன் சாரதிக்கு  25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆம் வகுப்பு மாணவியை தனது வாகனத்திற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக, ஒரு குழந்தையின் தந்தையான 68 வயது பாடசாலை வேன் சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் இவ்வாறு  கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது 

உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிதா நேற்று இந்த தண்டனையை விதித்துள்ளார். 

பாதிக்கப்பட்டவருக்கு  30,000 ரூபா அபராதமும்  500,000 ரூபா இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டது. பணம் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சட்டதரணிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வயதைக் கருத்தில் கொண்டு சிறிய தண்டனை விதிக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி இந்த தண்டனையை விதித்தார்.

சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, சிறுமியை இனிப்புகளால் கவர்ந்து, மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்ததாகவும்  சட்டதரணிகள்  தெரிவித்தனர். 

சிறுமி தனது நண்பரிடம் இது குறித்து தெரிவித்ததையடுத்து, அவரது தாயார் காவல்துறையில் புகார் அளித்த பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தக் குற்றம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும் என்று நீதிபதி கூறினார்.