மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!
கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரட், போஞ்சி, பூசணி, கோவா, தக்காளி, லீக்ஸ், முள்ளங்கி ஆகியவற்றின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒரு கிலோ பூசணி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி