தொழில் திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை செயற்பாட்டு வாரம் ஆரம்பம்!


ஊழியர்களின் தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புடைய பிணக்குகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடமாடும் சேவை செயற்பாட்டு வாரம் ஆரம்பமாக உள்ளது.

இதன்படி, தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, அனைத்து மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களிலும் செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 26 வரை விசேட நடமாடும் சேவை வாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் தகவலின்படி, இந்த சேவைகளின் மூலம் ஊழியர்கள் பின்வரும் உதவிகளைப் பெற முடியும்:

ஊழியர் சேமலாப நிதி உறுப்புரிமை கணக்குகளின் தரவுகள் மற்றும் நிலுவைகளை பரிசீலித்தல்.

தவறான உறுப்பினர் கணக்குத் தகவல்களை தேசிய அடையாள அட்டையில் உள்ளபடி திருத்தித்தல்.

புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்தல்.

முறைப்பாடுகளை சமர்ப்பித்தல்.

தொழில்சட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது.

இச் சேவைகளைப் பெற விரும்பும் ஊழியர்கள், தங்களின் தேசிய அடையாள அட்டை, பி பத்திரம் (பதிவு செய்யப்பட்டிருந்தால்), மேலும் தொழில் தருநரின் கடிதம் (திருத்தங்கள் தேவைப்பட்டால்) ஆகிய தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்துக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.