அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; ஆரம்பமான சட்ட நடவடிக்கைகள்!


முன்னாள் அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்திற்காக தற்போது ஒரு சிறப்பு குழு செயல்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.