போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
குறைந்தளவான வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலைவாய்ப்புமோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.இருப்பினும், மோசடி செய்பவர்கள் நிகல்நிலை விளம்பரங்கள் மூலம் தனிநபர்களை குறிவைத்து, பெரும்பாலும் போலி வேலை வாய்ப்புகளுக்கு பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையை கோருகின்றனர்.
வேலைவாய்ப்பு மோசடிகளை எவ்வாறு அடையாளம் கண்டு தவிர்ப்பது என்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு சமூக ஊடக பிரச்சாரத்தைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
