மக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள புதிய 2000 ரூபா நாணயத்தாள்!


அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபா புதிய நாணயத்தாள் மக்கள் புழக்கத்திற்கென உத்தரவாதமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 29ம் திகதி மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டது.

புதிய நாணயத்தாளை பயன்படுத்தல் மற்றும் விநியோகத்திற்கென வர்த்தக வங்கிகள் அதனை தமது பண கணக்கிடுதல் இயந்திரங்களின் நடைமுறையில் இணைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய படிப்படியாக புதிய நாணயத்தாள் மக்களின் புழக்கத்திற்கென விநியோகிக்கப்படும்.