யாழில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு ; தாக்குதலாளியை பிடிக்க முயன்றவர்கள் மீதும் தாக்குதல்!


யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 
இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். 

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்,  அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது. 

அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு, தாக்குதலாளி தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.