புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று பொறுப்பேற்பு!
இலங்கையின் 37 ஆவது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இன்று (14) கொழும்பு 02 இல்அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபராக பொறுப்பேற்பார்.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், குறித்த பதவிக்கு பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளதோடு நேற்று முன்தினம் (12) அரசியலமைப்பு சபை அதனை அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி