ரணிலுக்கு அறுவை சிகிச்சை அவசியம்!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்சன் பெல்லன தெரிவித்துள்ளார். 

“ரணிலின் இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. அவருக்கு விரைவாக அறுவை சிகிச்சை செய்தால் நல்லது. 

தேசிய வைத்தியசாலையில் காத்திருப்பு பட்டியலில் இருந்து தான் செய்ய வேண்டும். அதற்கு சில நேரங்களில் மூன்று வருடங்கள் வரை ஆகலாம். 

எனவே பிணை வழங்கப்பட்டதால் அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம். எனவே சொந்த செலவில் அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு சென்று சத்திரசிகிச்சை செய்யலாம். 

அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு நீரிழப்பும் உள்ளது. 

இந் நிலை படிப்படியாக சரி செய்யப்பட்டு வரும்போது, அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது. 

அதை இயல்பு நிலைக்கு கொண்டுவர அறுவை சிகிச்சை முக்கியம்” என ருக்சன் கூறியுள்ளார். 

இந்நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் என்றும் மருத்துவ சிகிச்சை முடிந்ததன் பின்னர் அனைத்து தரப்பினரிடமும் உரையாற்றவுள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.