இருதய நோய்க்கு கொவிட் தடுப்பூசி காரணமில்லை!


அண்மைக்காலமாக இளைஞர்களிடையே அதிகரித்துள்ள இதய நோய்க்கு கொவிட் - 19 தடுப்பூசிதான் காரணம் என பரவும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என இருதய நோய் நிபுணர் சுட்டிக் காட்டியுள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் டொக்டர். டிஸ்னி அமரதுங்க நேற்று (27) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.