ரணிலின் உடல்நிலையில் திருப்தி - நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா எனும் தீர்மானம் நாளை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளாக கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க,
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிறப்பு வைத்தியர்கள் முன்னாள் ஜனாதிபதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், தற்போது அவரது உடல்நிலை திருப்திகரமான நிலையில் இருந்தாலும், திடீரென அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர் கூறினார்.
இருப்பினும், இன்று பிற்பகல் நடைபெறும் வைத்தியர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு, நாளை (26) நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று வைத்தியர் பிரதீப் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி