ரணிலின் வழக்கு :சமூக ஊடகங்களின் மூலம் நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்தல் தண்டணைக்குரிய குற்றமாகும்!


அரசியலமைப்பின் 111(C) (1)மற்றும் (2) ஆகிய சரத்துகளுக்கு அமைய சமூக வலைத்தளங்களில் ஊடாக நீதமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்கின்றமை தண்டணைக்குரிய குற்றமாகும் என இலங்கை சட்டதரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதனால் விசேட வைத்தியர்கள் சபை அறிவித்துள்ளதன் படி நீதிமன்ற உத்தரவுகளுக்கமைய தொழிநுட்பத்தின் ஊடாக தொடர்புபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

இதனை கண்டிக்கும் முகமாகவே மேற்படி இலங்கை சட்டதரணிகள் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.