மெத்தையில் இருந்து தவறி வீழ்ந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!


சென்னையில் மெத்தையில் இருந்து தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அமைந்துள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 6 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தது.

இந்த சம்பவத்தையடுத்து சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.