பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீ - கட்டுப்படுத்த ஹெலிகொப்டர் களத்தில்..!


பலாங்கொடை, ஹால்பே ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தீயை அணைக்க இராணுவத்தினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தீயை அணைக்க பெல் 412 விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.