பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஏற்பட்டுள்ள நோய் - வெளியான தகவல்
அடுத்த ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு சாத்தியமாகும் என பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே பதில் பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளில் 20 - 40 சதவீதமானோர் வரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 சதவீதமானோரை இன்னும் சோதனை செய்யவில்லை.
மீதமுள்ள 30 சதவீதமானோர் சில உடல்நலப் பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
சில அதிகாரிகளுக்கு வீட்டுப் பிரச்சினைகள், வேலையின் அழுத்தம் போன்றவை காரணமாகவும் தொற்றா நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகள் மேம்படுத்தப்படும். பொலிஸ் அதிகாரிகளால் செய்யப்படும் பணிகள் மிக உயர்ந்த தரத்திற்கு கொண்டு வந்து, அவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும்.
பொலிஸ் அதிகாரிகள் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்கள். அந்த சம்பளம் தொடர்பாக ஜனாதிபதியின் அவதானம் வரை கொண்டு செல்லப்பட்டது.
அந்த அவதானத்திற்கு அமைய அடுத்த ஆண்டு புதிய சம்பள அமைப்பைத் தயாரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.