அரியானாவில் அடுத்தடுத்து இரண்டு முறை உணரப்பட்ட நிலநடுக்கம்


அரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில் இன்று (17) மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மதியம் 12.34 மணியளவில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 2.5 ஆக பதிவாகியுள்ளதுடன், 5 கி.மீ ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டது. இது 28.64° வடக்கு அகல வகை, 76.75° கிழக்கு தீர்க்கரேகை பகுதியாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.  

நிலநடுக்கம் லேசானதாக இருந்ததால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, இதன் அதிர்வுகள் டெல்லி வரை உணரப்பட்டதால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.  

மேலும், இதற்கு முன்னதாக அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் அதிகாலை 12.46 மணியளவில், 3.3 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் இடையறாத அதிர்வுகளை எதிர்பார்த்தபடி பெரும் அச்சத்துடன் உள்ளனர்.