சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்த விண்ணப்பங்கள் இன்று முதல்!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி வரை கோரப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு பரீட்சை எழுதிய மாணவர்களில் 73.45% பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றனர்.
Tags:
இலங்கை செய்தி