முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வது நியாயமற்ற முடிவு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் புகார் அளிக்க ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளதாகக் கூறுகிறார்.
இது மிகவும் நியாயமற்ற முடிவு என்று கூறிய மானகே, தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியத்திற்காக காத்திருக்கும் பல வயதான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவால் பெரும் சிக்கலை எதிர்நோக்குவார்கள் என்றும் கூறினார்.
ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழலில் ஓய்வூதியத்தை ரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.
Tags:
இலங்கை செய்தி