தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதிக்கும் ஈழத்து வேடன்!


யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரின் மகனான வேடன், மலையாள திரைத் துறையில் புகழ்பெற்ற ரெப் பாடகராக விளங்குகிறார். சாதி மற்றும் நிற அடக்குமுறைகளை எதிர்த்து அவர் எழுதிய பாடல்கள் பலரது கவனத்தை பெற்றுள்ளன.

இந்தநிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராகவேடன் புதிய முயற்சியைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.