சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டித் திட்டம்!


2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் - 2025' நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது, இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். 

அவர்களின் நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposit) சந்தை வட்டி விகிதத்தைவிட கூடுதல் வருமானம் வழங்குவதை இதன் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. 

மேலும், ஆண்டுக்கு 1 மில்லியன் ரூபாய் வரை FD வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவார்கள்.