அமெரிக்கா இலங்கை மீது விதிக்கும் வரியில் தள்ளுபடி!
அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அமெரிக்கா, ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த 44 சதவீத வரியை மறுசீரமைத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானம், இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்குமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வரிச் சலுகை காரணமாக இலங்கை தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் போட்டித் திறனை அதிகரிக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.