நாட்டில் வாழைப்பழ விற்பனையில் வீழ்ச்சி!
இலங்கையின் பல பகுதிகளில் வாழைப்பழ உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், தற்போதைய சந்தை நிலைமையால் விற்பனை மோசமடைந்துள்ளது. இதனால் பல்வேறு பிரதேசங்களில் விவசாயிகள் கடுமையான நட்டங்களை எதிர்கொண்டும், பலர் பழங்களை சாலையோரங்களில் கழிவாகவே வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முந்தைய மாதங்களில் ஒரு கிலோ வாழைப்பழத்திற்கு ரூ.120 வரை விலை கிடைத்திருந்த நிலையில், தற்போது அது ரூ.40 முதல் ரூ.60 வரை குறைந்துள்ளது.
தம்புத்தேகம பொருளாதார நிலையத்தில் மட்டும் தினமும் சுமார் 500 கிலோ வாழைப்பழங்கள் அகற்றப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாழைப்பழ உற்பத்தி அதிகமாகவும், அதனுடன் விற்பனை குறைவாகவும் இருப்பதே இந்த நிலைமையை உருவாக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, புளி வாழைப்பழத்திற்கு ரூ.10 ஆகிய விலைக்கும் வாங்குபவர்கள் இல்லை என்பதையும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி