சவூதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிக்கும் அறுவை சிகிச்சை ஆரம்பம்!
சவூதி அரேபியாவின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான யாரா மற்றும் லாராவைப் பிரிக்கும் பெரும் அறுவைச் சிகிச்சை இன்று ரியாத்திலுள்ள மன்னர் அப்துல்லா சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சை, மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அறுவைச் சிகிச்சை உலக அளவில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள ஒரு சிக்கலான மருத்துவ நடவடிக்கையாகும்.
மொத்தம் ஒன்பது நிலைகளைக் கொண்ட இந்த அறுவைச் சிகிச்சை சுமார் 15 மணி நேரம் வரை நீடிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
உலகம்