நச்சு வாசனைத் திரவியத்தை முகர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி!


தலவாக்கலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில்  கல்வி கற்கும் 3 மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த வாசனைத் திரவியத்தை முகர்ந்ததால் திடீர் சுகவீனமுற்று லிந்துலை பிரதேச  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தரம் 6இல் கல்வி கற்கும் 3 மாணவர்களே இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நச்சுத்தன்மை வாய்ந்த வாசனைத் திரவியத்தை முகர்ந்ததன் காரணமாக இந்த மாணவர்கள் தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச பிராந்திய வைத்திசாலையின்  மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவாராச்சி தெரிவித்தார்.

அத்தோடு, மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு வாசனைத் திரவியமொன்றைக் கொண்டுசென்றதாகவும்,

அதனை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதாலேயே, அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.