கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, கேரளாவில் ஜூலை 22ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை, 16 ஆண்டுகளில் இல்லாத வகையில், கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியதுடன், தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:
இந்திய செய்தி